கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து இந்திய வம்வாவளியினர் மாற்றம்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்ய இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் கனேடிய அரசியலில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து இந்திய வம்சாவளியினர் மாற்றம்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைச் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த் பாதுகாப்புத்துறையிலிருந்து மாற்றப்பட்டு பொருளாதாரம் தொடர்பான ஒரு துறையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புலம்பெயர்ந்தவரான அனிதாவின் தந்தை ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
Justin Tang/The Canadian Press
ஏழு அமைச்சர்கள் கேபினட்டிலிருந்து வெளியேற்றம்
அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, நீதித்துறை அமைச்சரான David Lametti, பொது பாதுகாப்புத்துறை அமைச்சரான Marco Mendicino, கஜானா போர்டின் தலைவரான Mona Fortier உட்பட ஏழு பேர் கேபினட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்டவர்களில் சிலர், இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று இப்போதே அறிவித்துவிட்டார்கள்.
The Canadian Press
சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்
பொது பாதுகாப்புத்துறை அமைச்சரான Marco Mendicinoவைப் பொருத்தவரை, சீரியல் கில்லரான Paul Bernardo என்பவரை அதிக பாதுகாப்புள்ள சிறையிலிருந்து குறைந்த பாதுகாப்பு சிறைக்கு மாற்றிய விடயத்தால் பெரும் அழுத்தத்துக்குள்ளாகியிருந்ததுடன், அரசின் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம், வெளிநாட்டினர் தலையீட்டு ஆவணம் என பல குற்றச்சாட்டுகளும் அவர் மீது இருந்தது.
வயதான அமைச்சர்கள் பலருக்கு பதிலாக பிரதமர் ட்ரூடோ இளைய தலைமுறையினரை அமைச்சர்களாக்க திட்டமிட்டுள்ளதாக மூத்த அரசு அலுவலர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |