தாமஸ் எடிசனின் சாதனையை முறியடித்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி யார் தெரியுமா?
உலகின் ஏழாவது மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளரான இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் தாமஸ் எடிசனை முந்தியுள்ளார்.
இந்திய வம்சாவளி விஞ்ஞானி
இந்திய மாநிலமான பஞ்சாப், அமிர்தசரஸைச் சேர்ந்த சீக்கியர் குருதேஜ் சந்து. உலகின் ஏழாவது மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளரான இவர்1,382 அமெரிக்க காப்புரிமைகளுடன், தாமஸ் எடிசனின் சாதனையை முறியடித்துள்ளார்.
இத்தகைய சாதனையின் மூலம் இவர் இந்தியாவையும், அவர் படித்த அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார்.
உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான Micron Technology Inc நிறுவனத்தின் மூத்த சக ஊழியராகவும் துணைத் தலைவராகவும் குருதேஜ் சந்து உள்ளார். இந்த நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் இடாஹோவில் உள்ள போயிஸில் உள்ளது.
இவர் GNDU-வின் வேதியியல் துறையின் முன்னோடித் தலைவரான பேராசிரியர் SS சந்துவின் மகன் ஆவார். இவர் லண்டனில் பிறந்திருந்தாலும் தனது குழந்தைப் பருவத்தை இந்தியாவில் கழித்தார்.
IIT டெல்லியில் மின் பொறியியலில் BTech பட்டமும், 1980 ஆம் ஆண்டு GNDU-வில் இயற்பியலில் முதுகலைப் பட்டமும் (ஹானர்ஸ்) பெற்றார். பின்னர், வட கரோலினா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்றார்.
இவருக்கு மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் குறைக்கடத்தி அளவிடுதலில் செய்த முன்னேற்றங்களுக்காக 2018 ஆம் ஆண்டில் IEEE Andrew S Grove விருது வழங்கப்பட்டது.
இவருடைய சாதனையை பொருத்தவரை அணு அடுக்கு படிவு, ஆக்ஸிஜன் இல்லாத டைட்டானியம் பூச்சு மற்றும் பிட்ச்-டப்ளிங் நுட்பங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும், ஸ்மார்ட்போன்கள், கமெராக்கள் மற்றும் cloud storage system போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களுக்குப் பின்னால் உள்ள சிறிய சில்லுகளை உருவாக்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |