இந்தியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்ட வழக்கு: இனவெறுப்பு காரணம் என தகவல்
சமீபத்தில் கனடாவில் இந்தியர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
கனடாவில் கொல்லப்பட்ட இந்தியர்
கனடாவின் தலைநகரான Ottawaவுக்கு அருகிலுள்ள ராக்லேண்ட் என்னுமிடத்தில், வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 3.00 மணியளவில், இந்தியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
தற்போது அவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவரது பெயர் தர்மேஷ் கதிரேயா (27) என்பது தெரியவந்துள்ளது.
தர்மேஷ், இந்தியாவின் குஜராத்திலுள்ள Bhavnagar என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஆவார். 2019ஆம் ஆண்டு சர்வதேச மாணவராக கனடாவுக்குக் கல்வி கற்க வந்த தர்மேஷ், பணி அனுமதி பெற்று பணி செய்துவந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மதியம், தர்மேஷ் தான் தங்கியிருந்த கட்டிடத்திலுள்ள லாண்டரியிலிருந்து வெளியே வரும்போது, அதே கட்டிடத்தில் தங்கியிருந்த 60 வயதுகளிலிருக்கும் வெள்ளையர் ஒருவர் தர்மேஷை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்ட தர்மேஷ் உயிரிழந்துவிட்டார். தர்மேஷைக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பெயரை பொலிசார் வெளியிடவில்லை.
ஏற்கனவே அந்த நபர் தர்மேஷையும் அவரது மனைவியையும் இந்தியர்கள் என்பதாலும் இனவெறுப்பு காரணமாகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.
ஆகவே, இந்த தாக்குதல், இனவெறுப்பு காரணமாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |