AIஆல் வேலை கிடைப்பதில் பிரச்சினை: இந்திய இளம்பெண் கூறும் கவலையை ஏற்படுத்தும் தகவல்
AI பலரது வேலைகளை எடுத்துக்கொள்வதால் மனிதர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை என்னும் குற்றச்சாட்டு ஏற்கனவே முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், AI தொடர்பில் கவலையை ஏற்படுத்தும் மற்றொரு தகவலை தெரிவித்துள்ளார் இந்தியவம்சாவளி இளம்பெண்ணொருவர்.
AIஆல் வேலை கிடைப்பதில் சிக்கல்
பிரித்தானியாவில் வாழும் இந்தியவம்சாவளியினரான புவனா (Bhuvana Chilukuri, 20), தான் 100 வேலைகளுக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால், தனக்கு ஒரு வேலை கூட கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
சில இடங்களில், விண்ணப்பித்த இரண்டு நிமிடங்களில், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது என தனக்கு பதில் வந்ததாக தெரிவிக்கிறார் புவனா.
அதாவது, தனது விண்ணப்பங்களை மனிதர்கள் பார்வையிடவேயில்லை என்கிறார் அவர்.
(Bhuvana Chilukuri/LinkedIn)
விண்ணப்பங்களை பரிசீலிக்க அலுவலகங்கள் AI கருவிகளை பயன்படுத்துவதாகவும், அதனால், விரைவாகவே விண்ணப்பங்கள் நிராகரிப்படுவதாகவும் தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவிக்கிறார் புவனா.
பல இடங்களில் வேலை சார்ந்த களப்பயிற்சி (internship) முடித்தும், பணி அனுபவம் பெற்றும், தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்கிறார் புவனா.
புவனா கூறுவதும் உண்மைதான் போலிருக்கிறது. Adecco Group என்னும் நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாகிய டெனிஸ் (Denis Machuel), தங்கள் நிறுவனம், வேலைக்கு விண்ணப்பிப்போரின் ஆரம்ப கட்ட விண்ணப்பங்களை ஸ்கிரீன் செய்வதற்காக, AI கருவிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கிறார்.
நிறுவனங்கள் பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் விதம் மாறிவிட்டது என்று கூறும் அவர், இனி உள்ள காலங்களில், வேலை வேண்டுவோர், ஒரு வேலைக்கே சராசரியாக 200 விண்ணப்பங்களை அனுப்பவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |