பிரித்தானியாவில் வெள்ளையின இளைஞர்களால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்
பிரித்தானியாவில் பிரித்தானிய குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்தும், தாங்கள் உண்மையாகவே பிரித்தானிய குடிமக்கள்தானா என சந்தேகப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள் பலர்.
ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதல் அமைச்சருக்குக் கூட இந்த விடயத்தில் விதிவிலக்கில்லை!
வெள்ளையின இளைஞர்களால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண்
இந்திய வம்சாவளியினரான சுனிதா (Sunita Thind), பிரித்தானிய குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக இங்கிலாந்திலுள்ள Derby என்னுமிடத்தில் வாழ்ந்துவருகிறார்.
இந்த வாரத் துவக்கத்தில் குருத்வாராவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார் சுனிதா.
Picture: Sahala Hayes
அப்போது, திடீரென ஏதோ ஒரு பொருள் வந்து அவரது தலையின் பின்பக்கத்தில் தாக்கியுள்ளது. அதிர்ச்சியில் தடுமாறி அருகிலுள்ள விளக்குக்கம்பத்தைப் பிடித்துக்கொண்டு சாய்ந்திருக்கிறார் சுனிதா.
திரும்பிப் பார்த்தால், சில வெள்ளையின இளைஞர்கள் நின்று அவரைப் பார்த்து கேலியாக சிரித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அத்துடன் மோசமான வார்த்தைகளால் அவரை விமர்சித்து, உன் நாட்டுக்குத் திரும்பிப் போ என சத்தமிட்டிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள்.
அவர்கள் அவர் மேல் வீசியது ஒரு கோக் கேன். தலையில் அடிபட்டு, உடையில் கோக் கொட்டி, அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய சுனிதா, இப்போதெல்லாம் ஆள்நடமாட்டமில்லாத தெருக்கள் பக்கமே போவதில்லை என்கிறார்.
2000ஆம் ஆண்டிலும் இதேபோல ஒரு கூட்டம் தன்னை இனரீதியாக தாக்கியதாக தெரிவிக்கும் சுனிதா, 24 ஆண்டுகள் ஆகியும் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்.
Picture: Metro Graphics
அத்துடன், தான் பொலிசாரிடமும் புகாரளிக்கவில்லை என்கிறார் சுனிதா. முன்பு நான் தாக்கப்பட்டபோது புகாரளிக்க, அப்போது அவர்கள் தன் புகாரை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது மட்டும் அவர்கள் தன் புகாரை சீரியசாக எடுத்துக்கொள்ளப்போகிறார்களா என்கிறார் அவர்.
ஆக, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்த இனவெறுப்பும், வன்மமும் வெள்ளையர்களில் சிலருக்கு நீங்கவே நீங்காது போலிருக்கிறது.
Picture: Sunita Thind/Sahala Hayes
சாதாரண மக்களுக்குத்தான் இந்த நிலை என்றில்லை. பிரித்தானியாவில் வெடித்த புலம்பெயர்ந்தோர் மற்றும், ஆசியர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கெதிரான வன்முறையைத் தொடர்ந்து, ஸ்கொட்லாந்தின் முன்னாள் முதல் அமைச்சரான Humza Yousafம் கூட, இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கிறார்.
அந்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியாவில் என் மற்றும் என் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |