பிராம்ப்டன் மேயருக்கு கொலை மிரட்டல்... சிக்கிய இந்திய வம்சாவளி நபர்
பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேயர் பிரவுன்
செவ்வாய்க்கிழமை பீல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 29 வயதான கன்வர்ஜோத் சிங் மனோரியா என்பவர் மீது மரணம் அல்லது உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாக மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மேயர் பிரவுன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அஞ்சல் மூலம் பெறப்பட்ட அச்சுறுத்தல்கள் ஜூன் மாத இறுதியில் பொலிசாரிடம் புகார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மேயர் பிரவுனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மனோரியா தனியாகவே செயல்பட்டுள்ளது விசாரணை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்ட நிலையில், மேயருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு இனி அச்சுறுத்தல் இல்லை என்றே பொலிஸ் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மனோரியாவின் தந்தை
முன்னதாக, பிரவுன், மேயர் பதவியை விட்டு விலகுமாறும் நகரத்தையும் விட்டு வெளியேறுமாறு மிரட்டல் கடிதம் அனுப்பியதாகவும், இல்லையெனில் தானும், தனது மனைவியும், மகனும் கொல்லப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மனோரியாவிற்கு 10,000 கனேடிய டொலர் பிணைத்தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையை மனோரியாவின் தந்தையே செலுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |