ஐரோப்பாவில் தங்கம் வென்ற பிரித்தானிய சிறுவன்! இந்திய வம்சாவளிக்கு குவியும் வாழ்த்துக்கள்
பிரித்தானியாவின் இந்திய வம்சாவளி சிறுவன் ஈஸ்வர் சர்மா ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.
இந்திய வம்சாவளி சிறுவன்
ஐரோப்பிய நாடான சுவீடனில் ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் பிரித்தானியாவின் 13 வயது ஈஸ்வர் சர்மா கலந்து கொண்டார்.
12 - 14 வயதிற்குட்பட்டோருக்கான இந்தப் போட்டியில் ஈஸ்வர் சர்மா 2023ஆம் ஆண்டுக்கான தங்கம் வென்றார்.
ஈஸ்வர் சர்மா பிரித்தானியாவின் கென்ட்டில் உள்ள செவெனோக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர். ஆனால் இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
உலக யோகா சாம்பியன்ஷிப்
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த இவரது தந்தை தினமும் யோகா செய்ததை பார்த்து, தனது 3 வயதிலேயே ஈஸ்வர் பயிற்சியை தொடங்கினார். அதன் பின்னர் இளம் வயதிலேயே பல உலக யோகா சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார்.
போலிச்சான்றிதழ்களுடன் பிரித்தானியா செல்ல முயன்ற 8 இந்தியர்கள்: 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்த பரிதாபம்
மேலும், கோவிட்-19 ஊரடங்கு காலகட்டத்தில் ஈஸ்வர் சர்மா 14 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தினசரி யோகா வகுப்புகளை வழிநடத்தி, அப்போதைய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் 'Points of Light' விருது பெற்றார்.
அத்துடன் யோகாவில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் 5 உலக சாம்பியன்ஷிப் மற்றும் பிரித்தானிய சிட்டிசன் யூத் விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
iYogasolutions
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |