தாயைப் பார்க்க பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு காரில் சாகசப் பயணம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியர் ஒருவர் தனது தாயைப் சந்திக்க பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு காரில் சாகசப் பயணத்தை முடித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாட்டவரான விராஜ் முங்கலே (Viraj Mungale), தனது தாயைச் சந்திப்பதற்காக தனது SUV காரில் லண்டனில் இருந்து தானேக்கு ஓட்டிச்சென்று அசாதாரண பயணத்தை முடித்துள்ளார்.
59 நாட்களில் 16 நாடுகளைக் கடந்து இப்பயணத்தை அவர் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், போலந்து, லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, திபெத், நேபாளம் மற்றும் இறுதியாக இந்தியாவிற்குள் நுழைந்து சுமார் 18,300 கிமீ தூரத்தை இப்பயணத்தில் கடந்துள்ளார்.
வழியில், அவருடன் நேபாள நண்பர் ரோஷன் ஷ்ரஸ்தா நேபாளத்தின் காத்மாண்டு வரை சென்றார்.
இந்த சாகசப் பயணத்திற்கான உத்வேகம், வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டுப் பாதையின் மீதான அவரது ஈர்ப்பிலிருந்து உருவானது என்று அவர் கூறியுள்ளார்.
"நான் ஒரு நாளைக்கு தோராயமாக 400-600 கி.மீ ஓட்டினேன், எப்போதாவது 1,000 கி.மீ. வரை சென்றுள்ளேன், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து இரவு ஓட்டுவதைத் தவிர்த்தேன்" என்று விராஜ் முங்கலே தெரிவித்தார்.
ஜூன் 17 அன்று தானே சென்றடைந்தார்.
இப்பயணத்திற்காக விராஜ் முங்கலே தனது வேலையில் இருந்து இரண்டு மாத விடுப்பு எடுத்ததாகவும், அவர் பயணம் செய்யும் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அனுமதிகள் மற்றும் சட்ட அனுமதிகளை உன்னிப்பாக ஏற்பாடு செய்ததாகவும் கூறினார்.
5,200 மீட்டர் உயரத்தில் பயணித்தபோது உயர நோயால் (Altitude sickness) பாதிக்கப்பட்டதாகவும் மற்றும் பனி மற்றும் குளிர் உள்ளிட்ட தீவிர வானிலையால் சில சவால்களை இப்பயணத்தில் எதிர்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
முங்கலே விமானம் மூலம் பிரித்தானியா திரும்பி தனது காரை ஷிப்பிங் மூலம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK to India SUV trip, Viraj Mungale, Toyota SUV, London to Thane road trip