லண்டனில் 28 ஆண்டுகளுக்கு முன் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்., இப்போது இந்திய வம்சாவளி பிரித்தானியர் மீது வழக்கு
லண்டனில் 28 ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணை கத்தியால் குத்தியதற்காக இந்திய வம்சாவளி பிரித்தானியர் மீது பொலிஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்திய வம்சாவளி ஆண்
28 ஆண்டுகளுக்கு முன்பு (1994) மத்திய லண்டனில் உள்ள வீடு ஒன்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஒரு பெண்ணைக் கொன்றதாக இந்திய வம்சாவளி ஆண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து யார்டு இன்று தெரிவித்துள்ளது.
50 வயதான சந்தீப் படேல் (Sandip Patel), ஆகஸ்ட் 8, 1994 அன்று மேரிலேபோனில் உள்ள சில்டர்ன் தெருவில் உள்ள தனது வீட்டில் குத்தப்பட்டு இறந்த மெரினா கொப்பலைக் (Marina Koppell) கொலை செய்ததாக லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
Crimewatch
லண்டன் பெருநகர காவல்துறை
மெரினா கொல்லப்படும் போது அவருக்கு வயது 39. தீர்க்கப்படாத வழக்குகளை மறுஆய்வு செய்ததன் விளைவாக சந்தேக நபரை கண்டுபிடித்ததாக லண்டன் பெருநகர காவல்துறை (Met Police) தெரிவித்துள்ளது.
கொலையின்போது வெளிவந்த தகவல்களின்படி, மெரினா ஒரு கொலம்பிய நாட்டைச் சேர்ந்த பெண் என்று நம்பப்படுகிறது, மேலும் அவரது உடல் அவரது ஆங்கிலேய கணவரால் பல கத்திக்குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் லண்டனில் 13 வருடங்கள் வசித்து வந்ததாகவும், பல ஆண்டுகளாக விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் காவல்துறை இந்த சம்பவத்தை "வெறித்தனமான தாக்குதல்" என்று விவரித்துள்ளனர்.