இந்திய வம்சாவளிச் சிறுமி விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: தந்தை கூறிய நெகிழவைக்கும் வார்த்தைகள்

India Canada
By Balamanuvelan Nov 19, 2022 10:20 AM GMT
Report

கனடாவில் விபத்தொன்றில் இந்திய வம்சாவளிச் சிறுமி ஒருத்தி கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

தாத்தா பாட்டியைக் காண கனடா வந்த பேத்திகள்

விர்ஜினியாவில் வாழ்ந்துவரும் சுக்விந்தர் சிங் குடும்பம், 2020ஆம் ஆண்டு, கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் தங்கள் பெற்றோரைக் காண்பதற்காக வந்திருந்த நிலையில், அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

குடிபோதையில் கார் ஓட்டிக்கொண்டுவந்த அலிஷியா (Alicia Van Bree, 35) என்ற பெண்ணின் கார், சுக்விந்தர் சிங் குடும்பம் பயணித்த கார் மீது மோதியதில், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த குடும்பத்தின் குட்டி தேவதை நிஹால் (Nihal Toor, 8) சம்பவ இடத்திலேயே பலியானாள்.

நிஹாலின் மரணம் மறக்க முடியாத பயங்கரமான நினைவுகளாக அந்தக் குடும்பத்தினர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இந்த வயதுக்குள்ளேயே, தூதரக அதிகாரியான தன் தந்தையுடன் இந்தியா உட்பட்ட பல நாடுகளை சுற்றி வந்த குட்டி தேவதையான தங்கள் மகளை இழந்த விடயம் அவர்களை எவ்வளவு பாதித்துள்ளது என்பதை லண்டன் நீதிமன்றத்தில் நேற்று கண்ணீர் வழிய பதிவு செய்தார்கள் நிஹால் குடும்பத்தினர்.

அப்போது, குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி, நிஹாலின் உயிரைப் பறித்த அலிஷியா தனது தரப்பு கருத்தைப் பதிவு செய்ய நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய அலிஷியா, நான் செய்த மிகப்பெரிய தவறின் தாக்கம் என்னை தினமும், ஒவ்வொரு கணமும் பாதிக்கிறது, நிஹாலால் எனது பிரார்த்தனைகளைக் கேட்கமுடியுமா? எனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.

இந்திய வம்சாவளிச் சிறுமி விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: தந்தை கூறிய நெகிழவைக்கும் வார்த்தைகள் | Indian Origin Was Killed In An Accident

image - lfpress

தன் மகள் பலியாக காரணமாக இருந்த பெண்ணிடம் சிறுமியின் தந்தை கூறிய வார்த்தைகள்

அலிஷியாவுக்கு பதிலளித்த நிஹாலின் தந்தையான சுக்விந்தர், நேரடியாக அவரைப் பார்த்து, அலிஷியா, உங்களை நான் முழுமையாக மன்னிக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன். நிஹாலும் அதைத்தான் விரும்பியிருப்பாள் என நான் நம்புகிறேன், அவள் எப்போதுமே யார் மீதும் கசப்போ கோபமோ வைத்ததில்லை என்றார்.

இந்திய வம்சாவளிச் சிறுமி விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: தந்தை கூறிய நெகிழவைக்கும் வார்த்தைகள் | Indian Origin Was Killed In An Accident

Submitted by Pam Bains

அலிஷியா தனது வாழ்நாள் முழுவதும் தனது தோளில் எவ்வளவு பெரிய சுமையை சுமக்கவேண்டும் என்பது எனக்குத் தெரியும் என்று கூறிய சுக்விந்தர், தான் அவரிடம் ஒரே ஒரு விடயம் மட்டும் கேட்டுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

அது, நிஹாலின் வாழ்க்கையிலிருந்து எதையாவது நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான். காரணம், இந்த வயதுக்குள் அவள் சென்ற இடமெல்லாம் ஆச்சரியத்துக்குரிய விடயங்களை அவள் செய்துவந்தாள் என்றார் அவர்.

அலிஷியா வழக்கு, இம்மாதம் (நவம்பர்) 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று அவரது தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிக்கப்படும்.  

இந்திய வம்சாவளிச் சிறுமி விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: தந்தை கூறிய நெகிழவைக்கும் வார்த்தைகள் | Indian Origin Was Killed In An Accident]

image - ctvnews

இந்திய வம்சாவளிச் சிறுமி விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: தந்தை கூறிய நெகிழவைக்கும் வார்த்தைகள் | Indian Origin Was Killed In An Accident

Submitted: Pam Bains


4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US