மகளைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் இவர்தான்: புகைப்படங்கள் வெளியாகின
இங்கிலாந்தில், பெற்ற மகளைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இந்திய வம்சாவளியினர் என்னும் தகவலும் வெளியாகியுள்ளது.
சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்
இங்கிலாந்திலுள்ள Rowley Regis என்னுமிடத்திலுள்ள வீடொன்றிற்கு, திங்கட்கிழமை இரவு 12.10 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.
பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு Shay Kang (10) என்னும் சிறுமி படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள். மருத்துவ உதவிக்குழுவினர் அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல், Shay Kang பரிதாபமாக பலியாகிவிட்டாள்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக அந்த வீட்டிலிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண், Shay Kangஇன் தாயாகிய ஜஸ்கிரத் கௌர் என்னும் ஜாஸ்மின் கேங் (Jaskirat Kaur, also known as Jasmine Kang, 33) என தெரியவந்ததையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
விவரங்கள் வெளியாகின
தற்போது ஜாஸ்மின் கேங் என அழைக்கப்படும் ஜஸ்கிரத் கௌர் என்னும் அந்தப் பெண் இந்திய வம்சாவளியினர் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஜாஸ்மின் மற்றும் அவருடைய மகளுடைய பழைய புகைப்படங்கள் சில பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |