அமெரிக்காவில் இரண்டு மகன்களை கொலை செய்த 35 வயது இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இந்திய வம்சாவளி பெண்ணொருவர், தனது 2 பிள்ளைகளை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்திய வம்சாவளிப் பெண்
நியூ ஜெர்சியின் ஹில்ஸ்பரோவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் பிரியதர்ஷினி நடராஜன் (35).
facebook.com/SomersetCountyProsecutor'sOffice
இவர் செவ்வாய்க்கிழமை அன்று, தனது 7 மற்றும் 5 வயது மகன்களை கொலை செய்ததாக அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி 13ஆம் திகதி அன்று, குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படும் ஒருவர், சட்ட அமலாக்கத் துறைக்கு 911 என்ற எண்ணில் அழைப்பு விடுத்தார்.
ஏதோ செய்துவிட்டாள்
அவர் வேலையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு, தனது 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்களும் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டதாகவும், "தன் மனைவி அவர்களுக்கு ஏதோ செய்துவிட்டாள்" என்று கூறியிருக்கிறார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பெண்ணை கைது செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும், அந்த வீட்டின் படுக்கையறைக்குள் இறந்த நிலையில் இருந்த இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |