வெளிநாடொன்றில் மாயமான இந்திய வம்சாவளி இளம்பெண்: சமீபத்திய தகவல்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் மாயமான நிலையில், தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாயமான இந்திய வம்சாவளி இளம்பெண்
ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, அதாவது, திங்கட்கிழமையன்று, இரவு 11.30 மணியளவில், டெக்சாஸிலுள்ள Brownwood Drive என்னுமிடத்திலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய இஷிகா தாக்கூர் (Ishika Thakore, 17) என்னும் இளம்பெண், வீடு திரும்பாததால், பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக, அவசர தேடுதல் எச்சரிக்கை விடுத்து இஷிகாவை தேடத்துவங்கினர் பொலிசார்.
CRITICAL MISSING-Frisco PD is seeking assistance in locating 17-year-old Ishika Thakore, last seen Monday, Apr 8 at 11:30p in the 11900-block of Brownwood Dr. in Frisco. She is approx 5’4” and 175 lbs, last seen wearing a black, long-sleeve t-shirt and red/green pajama pants. pic.twitter.com/L7fDV7HuEH
— Frisco Police (@FriscoPD) April 9, 2024
இந்நிலையில், இன்று அதிகாலை அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், அவர் எங்கிருந்தார், அவரை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது போன்ற எந்த விவரங்களையும் பொலிசார் வெளியிடவில்லை.
சமீப காலமாக தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் மர்மமான முறையில் உயிரிழந்துவரும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், காணாமல் போன இஷிகா கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் ஆறுதலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
LOCATED - The 17-year-old who was the subject of our Critical Missing Alert from earlier today has been located. We'd like to thank everyone for the offers of assistance and words of support.
— Frisco Police (@FriscoPD) April 10, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |