பிள்ளை யாரிடம் வளர்வது என்ற போட்டியில் இந்திய வம்சாவளி தாய் செய்த பயங்கர செயல்
விவாகரத்து செய்து பிரிந்த ஒரு தம்பதியரிடையே, பிள்ளையை யார் வளர்ப்பது என்ற போட்டி, பிள்ளையின் உயிரையே பறித்த பயங்கரம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
தாய் செய்த பயங்கர செயல்
இந்திய வம்சாவளியினரான சரிதா ராமராஜூவும் (48) அவரது கணவரான பிரகாஷ் ராஜூவும் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், தம்பதியரிடையே, தங்கள் மகனை யார் வளர்ப்பது என்ற போட்டி இருந்துள்ளது.
நீதிமன்றம், மகனுடன் நேரம் செலவிட சரிதாவுக்கு மூன்று நாட்கள் அனுமதியளித்திருந்த நிலையில், இம்மாதம், அதாவது, மகனை அழைத்துக்கொண்டு ஹொட்டல் ஒன்றிற்குச் சென்றுள்ளார் சரிதா.
ஹொட்டலில் தங்கி, டிஸ்னி லேண்டை சுற்றிப் பார்த்துவிட்டு, மார்ச் மாதம் 19ஆம் திகதி மகனை திரும்ப அவனது கணவரிடம் கொண்டுவிடவேண்டிய நேரத்தில், கத்தியால் அவனது கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டார் சரிதா.
காலை 9.12 மணிக்கு பொலிசாரை அழைத்த சரிதா தான் தன் மகனைக் கொன்றுவிட்டு, தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் பொலிசார் அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குச் சென்றபோது, சரிதாவின் மகன் இறந்து பல மணி நேரம் ஆனது தெரியவந்துள்ளது.
பொலிசார் வெளியிட்டுள்ள வீடியோ
தற்போது சரிதாவைக் கைது செய்யும் காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளார்கள்.
தான் தங்கியிருந்த அறையின் வெளியே, மொபைலில் பேசிக்கொண்டே நடந்துவரும் சரிதாவை பொலிசார் கைது செய்யும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
வழக்கை விசாரித்த நீதிபதி, பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இடமே தன் பெற்றோரின் கைகள்தான்.
ஆனால், சரிதா தன் மகனை அன்பாக தன் கைகளால் அணைத்துக்கொள்வதற்கு பதிலாக, அவனது கழுத்தை அறுத்துள்ளார்.
தான் வயிற்றில் சுமந்து உலகத்துக்குக் கொண்டுவந்த மகனை தானே உலகத்திலிருந்து அகற்றிவிட்டார் என்று கூறியுள்ளார் நீதிபதி.
சரிதாவுக்கு 26 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரிதாவின் மகனுக்கு வயது 11 என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |