பிரித்தானியாவில் இந்திய வம்சாவளிப்பெண் கொலை வழக்கு: கமெராவில் சிக்கிய காட்சிகள்
பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய ஆதாரங்களாக அமைந்த CCTV கமெரா காட்சிகளைக் குறித்த புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
இந்திய வம்சாவளிப்பெண் கொலை வழக்கு
2002ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் லீட்ஸில் அமைந்திருந்த ஒரு வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்கவே, பக்கத்து வீட்டிலிருந்த ஒருவர் உடனடியாக அவசர உதவியை அழைத்துள்ளார்.
ஆம்புலன்சுடன் விரைந்து வந்த பொலிசார், இரத்த வெள்ளத்தில் கிடந்த ஹர்லீன் கௌர் ( Harleen Kaur, 32) என்னும் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
இதற்கிடையில், பொலிசாரிடம் சத்பிரீத் சிங் (Satpreet Singh Gandhi, 37) என்பவர் சரணடைந்துள்ளார். அவர் ஹர்லீனுடைய கணவர்.
பிரித்தானியா வந்ததும் மாறிய இந்தியப்பெண்
இந்தியாவில் வாழ்ந்துவந்த சத்பிரீத், தன் மனைவி மாரடைப்பால் மரணமடைந்ததால், அவரது தங்கையான ஹர்லீனை திருமணம் செய்துள்ளார்.
இருவருமாக பிரித்தானியா வந்த நிலையில், பிரித்தானியாவுக்கு வந்ததும் ஹர்லீனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாக தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் சத்பிரீத்.
அத்துடன், தான் கைப்பட எழுதிய டைரியிலும், ஹர்லீன் எப்போது பார்த்தாலும் நண்பர்களுடன் பார்ட்டிக்குச் சென்றுவிடுவதாகவும், தன்னுடன் நேரம் செலவிடுவதில்லை என்றும், அதனால் தான் குடிக்கத் துவங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய ஒரு கூட்டம் நண்பர்களுடனேயே வாழ முடிவு செய்து தனது பெட்டி படுக்கையை பேக் செய்துள்ளார் ஹர்லீன்.
இருவரும் பிரிய, பிள்ளைகளை இந்தியாவிலிருக்கும் சத்பிரீத்தின் பெற்றோர் வளர்க்கத் துவங்கியுள்ளார்கள்.
ஆத்திரமடைந்த சத்பிரீத் கடைக்குச் சென்று கத்தி வாங்கிவந்துவைத்துக்கொண்டு, ஹர்லீன் வீட்டுக்குச் சென்று அவரைக் குத்திக்கொன்றுவிட்டார்.
கமெராவில் சிக்கிய காட்சிகள்
சத்பிரீத் கடையில் கத்திவாங்கும் காட்சிகளும், கத்தியுடன் தன் வீட்டில் நிற்கும் காட்சிகளும், கத்தியுடன் ஹர்லீன் வீட்டுக்குச் செல்லும் காட்சிகளும், பின்னர் கையில் ஏதோ மூட்டையுடன் வீடு திரும்பும் காட்சிகளும் பல கமெராக்களில் சிக்கியுள்ளன.
அவை வழக்கில் முக்கிய ஆதாரங்களாக பயன்பட்டுள்ளன.
சத்பிரீத்துக்கு 23 ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |