பிரித்தானியாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளி இளைஞர் பலி: பெற்றோர் கண்முன்னே சோகம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய வம்சாவளி மருத்துவர் குடும்பத்தார் கண்முன்னே விமான விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
அமீரகத்தில் பிறந்த மருத்துவர்
இந்திய வம்சாவளியான சுலைமான் அல் மஜித் (26) மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவர்.
இங்கிலாந்தில் உள்ள மருத்துவ கூட்டமைப்பில் தீவிர தொடர்பில் இருந்த சுலைமான், Durham மற்றும் Darlington NHS அறக்கட்டளையில் மருத்துவராக இருந்துள்ளார்.
மேலும், பிரித்தானிய மருத்துவ சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுலைமான், அங்கு கௌரவ செயலாளராகவும் பின்னர் வடக்கு வதிவிட மருத்துவர்கள் குழுவின் இணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
வாடகைக்கு விமானம்
இந்த நிலையில், சுலைமான் தனது குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்க்க இலகு ரக விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.
பின்னர் விமானியுடன் இணை விமானியாக சுலைமான் இயக்கியுள்ளார். அப்போது அவரது பெற்றோர் மற்றும் இளைய சகோதரர் விமானம் நிறுத்தும் கிளப்பில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
பரிதாப பலி
கடற்கரையை ஒட்டியிருந்த ஹொட்டல் ஒன்றின் அருகே, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென விபத்தில் சிக்கியது.
இதில் சுலைமானுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 26 வயது பெண்ணொருவரும் பரிதாபமாக பலியாகினர். தங்கள் கண்முன்னே சுலைமான் பலியானதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |