ஜேர்மன் காப்பகத்தில் சிக்கியுள்ள இந்திய குழந்தை: மீட்டுத் தர பிரதமரிடம் உதவி கோரும் பெற்றோர்
ஜேர்மனியில் காப்பகத்தில் இருக்கும் தங்கள் குழந்தையை திரும்பப் பெற்று தருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்திய தம்பதியினர் உதவி கோரியுள்ளனர்.
இந்திய பிரதமரிடம் கோரிக்கை
ஜேர்மன் குழந்தை உரிமைகள் (German Child Rights) காப்பகத்தில் உள்ள இந்தியக் குழந்தையின் பெற்றோர், ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து தங்கள் மகளை மீட்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்தும் முயற்சியில் இந்திய அதிகாரிகளைச் சந்திக்க வியாழன் அன்று மும்பை வந்தடைந்தனர்.
இவர்களது மூன்று வயது மகள் அரிஹா ஷா (Ariha Shah) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜேர்மன் அதிகாரிகளின் காவலில் இருக்கிறார்.
HT Photos
குழந்தையின் அந்தரங்க உறுப்பில் காயம்
வியாழன் அன்று மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் குழந்தையின் தாயார் தாரா ஷா (Dhara Shah), "செப்டம்பர் 2021-ல், எங்கள் மகள் ஜேர்மன் குழந்தை சேவையால் அழைத்துச் செல்லப்பட்டார். குழந்தைக்கு தற்செயலாக அந்தரங்க உறுப்பில் காயம் ஏற்பட்டது, நாங்கள் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவர்கள் எங்களை திருப்பி அனுப்பினர். அவள் நலமாக இருந்தாள். பின்னர் தொடர் சோதனைக்கு சென்றோம். எனது மகள் நலமாக இருப்பதாக மீண்டும் கூறப்பட்டது, ஆனால் மருத்துவர்கள், இம்முறை, குழந்தை சேவையை அழைத்து, என் மகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு தான் எங்களுக்கு தெரிந்தது, குழந்தைக்கு ஏற்பட்ட காயம் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கிறார்கள் என்று..,
தெளிவுபடுத்துவதற்காக, நாங்கள் எங்கள் டிஎன்ஏ மாதிரிகளைக் கூட கொடுத்தோம். டிஎன்ஏ சோதனை, பொலிஸ் விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்குப் பிறகு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு பிப்ரவரி 2022-ல் மூடப்பட்டது. டிசம்பர் 2021-ல், அதே மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த சந்தேகத்தை நிராகரித்தார்." என்று அவர் கூறினார்.
ANI
பெற்றோர் வேதனை
அதனை தொடந்து பேசிய குழந்தையின் தந்தை பவேஷ் ஷா (Bhavesh Shah), "இதற்குப் பிறகு, எங்கள் மகள் எங்களுடன் வருவார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் ஜெர்மன் குழந்தை சேவைகள் எங்களிடம் குழந்தையை ஒப்படைக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்து. அதற்காக நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றோம். நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டது. பெற்றோர் திறன் அறிக்கையை உருவாக்க, ஒரு வருடத்திற்குப் பிறகு, 150 பக்க பெற்றோர் திறன் சோதனை அறிக்கை எங்களுக்கு கிடைத்தது, அதில் உளவியலாளர் எங்களிடம் 12 மணிநேரம் மட்டுமே பேசினார்."
"அறிக்கையைப் பெற்ற பிறகு எங்களுக்கு அடுத்த விசாரணை தேதி கிடைத்தது. பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் வலுவானது என்றும் குழந்தை பெற்றோரிடம் திரும்ப வேண்டும், ஆனால் பெற்றோருக்கு குழந்தையை எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லை. அதனால், குழந்தை 3 முதல் 6 வயது வரை நாம் ஒரு குடும்ப வீட்டில் இருக்க வேண்டும். அந்த வயதில் தன் பெற்றோருடன் இருக்க விரும்புகிறாளா அல்லது வளர்ப்பு பராமரிப்பில் இருக்க வேண்டுமா என்பதை சிறுமியால் தீர்மானிக்க முடியும், என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்தது," என்று அவர் மேலும் கூறினார்.
" குழந்தையை அவள் விரும்பும் அளவுக்கு சாப்பிட வைக்கிறோம், அவள் விரும்பியபடி விளையாட அனுமதிக்கிறோம், போதிய அளவில் நெறிப்படுத்தவில்லை என்றும், குழந்தைக்கு இணைப்புக் கோளாறு (attachment disorder) இருப்பதாகவும், குழந்தை தானே காரியங்களைச் செய்ய விரும்பியதால் தான் இந்த கோளாறு ஏற்பட்டதாகவும் அவர்கள் எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்" என்று குழந்தையின் பெற்றோர் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கு அனுப்ப முடியாது
நீதிமன்ற வழக்கு நீண்ட காலம் நீடிப்பதால் குழந்தையை இந்தியாவுக்கு வர அனுமதிக்குமாறு அவர்களிடம் கேட்டோம். ஆனால், அவளுக்கு இந்திய மொழி தெரியாததால் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்றும் இதனால் அவளுக்கு மனவேதனை ஏற்படும் என்றும் அவர்கள் கூறிவிட்டார்கள்.
அவளுக்கு குறைந்தபட்சம் ஒரு இந்திய மொழியையாவது கற்பிக்க வேண்டும், ஒரு ஆசிரியர், தன்னார்வலர் அல்லது வழிகாட்டி தேவை இல்லை, எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதை எளிதாக செய்ய முடியும். ஜேர்மனியில் பல இந்தியர்கள் அவருக்கு இந்தி, குஜராத்தி கற்பிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் அவர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர், என்று பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, "பலரைப் போலவே நானும் நான் பணிபுரிந்த ஐடி நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். நாங்கள் எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் ஏற்கனவே 30-40 லட்சம் ரூபாய் கடனில் உள்ளோம்." என்று குழந்தியின் தனத்தை கூறுகிறார்.
மாதம் ஒரு மணிநேரம் சந்திக்க அனுமதி
குழந்தையின் தாய், "சமூக சேவகர் ஒருவரின் மேற்பார்வையில் ஒவ்வொரு மாதமும் ஒரு மணிநேரம் சிறுமியைச் சந்திக்க அனுமதிக்கப்படுகிறோம். அந்தப் பெண்ணுடனான எங்கள் தொடர்பைப் பற்றி அவர் சாதகமாகப் புகாரளித்தார். நாங்கள் அதிக வருகைகளைக் கோரினோம், ஆனால் அது சிறுமியை சோர்வடையச் செய்யும் என்று அவர்கள் மறுத்துவிட்டனர். ஆனால் செப்டம்பர் 2022-ல், நாங்கள் அவளை ஒரு மாதத்திற்கு இரண்டு முறை சந்திக்க அனுமதிக்கப்பட்டோம். ஆனால் ஜேர்மன் குழந்தை சேவைகள் நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றவில்லை. டிசம்பர் 2022-ல் இந்திய அரசு தலையிட்ட பிறகுதான் அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியத் தொடங்கினர்." என்று கூறினார்.
இந்தியாவிடம் உதவி
இந்நிலையில், "எங்களுக்கு நியாயமான விசாரணை கிடைக்காததால் நாங்கள் அவளை இந்தியாவுக்குக் கொண்டு வர விரும்புகிறோம். கலாசார வேறுபாடுகள் உள்ளன, அவை ஜேர்மன் அதிகாரிகளுக்கு விளக்குவது கடினம். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர உதவுமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக்கொள்கிறோம். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த பிரச்சனையை கவனித்து, எங்கள் குழந்தையை மீட்டெடுக்க எங்களுக்கு உதவ வேண்டும். பிரதமர் மோடி இந்த விஷயத்தை கையில் எடுத்தால், விஷயங்கள் தீர்க்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.