டொனால்டு டிரம்புடன் ஜனாதிபதி போட்டியில் மோதும் தென்னிந்தியர்: யார் இந்த விவேக் ராமசாமி?

Donald Trump Kerala Election
By Arbin Feb 27, 2023 07:40 AM GMT
Report

இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 37 வயது விவேக் ராமசாமி, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான போட்டியில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு போட்டியாக களமிறங்கியுள்ளார்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டம்

இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான விவேக் ராமசாமி குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக அயோவாவில் இருந்து களம் காண்கிறார். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் வடக்காஞ்சேரி பகுதியை சேர்ந்த ராமசாமி மற்றும் கீதா தம்பதியின் இரு மகன்களில் ஒருவரான விவேக் ராமசாமி சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

டொனால்டு டிரம்புடன் ஜனாதிபதி போட்டியில் மோதும் தென்னிந்தியர்: யார் இந்த விவேக் ராமசாமி? | Indian Parents Vivek Ramaswamy Running President

@tobycanham

டென்னிஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட விவேக், கொரோனா பெருந்தொற்றின் போது சில மாத காலம் முழு நேர தந்தையாக செயல்பட்டேன் என்பதை வேடிக்கையாக கூறுகிறார்.

அந்த வேளையில், தமது மனைவி நியூயார்க் மருத்துவமனையில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டது என்பதையும் விவேக் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு எதிர்கொள்ளும் சவால்களை குடியரசுக் கட்சியின் இன்னொரு வேட்பாளரான டொனால்டு ட்ரம்பால் சமாளிக்க முடியாது எனவும், அதற்கான திட்டமிடல் அவரிடம் இல்லை எனவும் விவேக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் வெறும் வாய் சவடால்

அமெரிக்காவை முதன்மை நாடாக உருவாக்க வேண்டும் என்றால், டிரம்ப் போன்று வெறும் வாய் சவடால் போதாது எனவும், முதலில் அமெரிக்கா என்றால் என்ன என்பதை நாம் கண்டுணர வேண்டும் எனவும் விவேக் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியை பொறுத்தமட்டில் தங்கள் முதல் வெற்றியை அயோவா மாகாணத்தில் இருந்து துவங்கவே ஆசைப்படுகிறார்கள். ஜனநாயக கட்சியினர் சமீப ஆண்டுகளாக தென் கரோலினா மாகாணத்தை தங்களின் கோட்டையாக உருமாற்றி வருகின்றனர்.

டொனால்டு டிரம்புடன் ஜனாதிபதி போட்டியில் மோதும் தென்னிந்தியர்: யார் இந்த விவேக் ராமசாமி? | Indian Parents Vivek Ramaswamy Running President

@tobycanham

கொரோனா பெருந்தொற்று தொடக்க நாட்களில் விவேக் மற்றும் அபூர்வா தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தது. கார்த்திக் தற்போது தமது மூன்றாவது வயது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

கார்த்திக் பிறந்த போது கொரோனா பரவல் காரணமாக மூன்று மாத காலம் தாங்கள் தனியாக வாழ முடிவு செய்ததாகவும், அபூர்வா அப்போது நியூயார்க் மருத்துவமனையில் பணியாற்றும் கட்டாயம் ஏற்பட்டதாகவும் விவேக் குறிப்பிட்டுள்ளார்.

GE நிறுவனத்தில் பொறியாளர்

அப்போது தமது மகன் பிறந்து நான்கு மாதமே ஆனதாகவும், தமது பிள்ளையை கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால், தமது பணிகளை பார்ட் டைமாக கவனித்ததாகவும் விவேக் தெரிவித்துள்ளார்.

பாலக்காடு பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய விவேக்கின் தந்தை ராமசாமி General Electric நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றியுள்ளார், தாயார் முதியோர் மனநல மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

டொனால்டு டிரம்புடன் ஜனாதிபதி போட்டியில் மோதும் தென்னிந்தியர்: யார் இந்த விவேக் ராமசாமி? | Indian Parents Vivek Ramaswamy Running President

@vivek2024

1985ல் ஓஹியோவின் சின்சினாட்டி பகுதியில் பிறந்த விவேக், 2003 ல் உயர்நிலைப் பள்ளி படிப்பில் சாதனை படைத்ததுடன், தேசிய அளவில் இளையோருக்கான டென்னிஸ் வீரர் தரவரிசையிலும் இடம் பெற்றார்.

2007 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிப்பை முடித்த விவேக், 2013ல் யேல் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US