இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு
இமயமலையின் கீழ் இந்திய தட்டு (Indian Plate) பிளவுபட்டு கொண்டிருப்பதாக புதிய ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை, இந்திய தட்டு முழுமையாக திபெத்தின் கீழ் ஒரு பெரிய தகடு போலச் சறுக்கி வருகிறது என விஞ்ஞானிகள் கருதினர்.
ஆனால் சமீபத்திய நில அதிர்வு (seismic) தரவுகள், இந்த தட்டு ஒரே துண்டாக நகரவில்லை. ஆழத்தில் கிழிந்து, பல்வேறு பகுதிகளாகப் பிரிகிறது என காட்டுகின்றன.

இந்திய தட்டு மற்றும் யூரேஷிய தட்டு இடையேயான மோதல் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அதுவே இமயமலை மற்றும் திபெத் பீடபூமியை உருவாக்கியது.
இதுவரை, இந்திய தட்டு தட்டையாக (flat) சரிகிறதா அல்லது செங்குத்தாக மூழ்குகிறதா என்ற விவாதம் இருந்தது. புதிய தரவுகள், இரண்டும் பகுதியளவில் உண்மை எனவும், plate tearing (பிளவுப்படுத்தல்) நிகழ்வும் நடக்கிறது எனவும் உறுதிப்படுத்துகின்றன.
இந்த கண்டுபிடிப்பு, இமயமலை உருவாக்கம் குறித்த நீண்டகால புவியியல் கோட்பாடுகளை சவாலுக்கு உட்படுத்துகிறது. மேலும், தெற்கு ஆசியாவில் எதிர்கால நிலநடுக்க அபாயங்கள் குறித்து புதிய புரிதலை அளிக்கிறது.
“இந்திய தட்டு பிளவுபடுகிறது என்பது, பிராந்திய நிலநடுக்க அபாயங்களை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டிய நிலையை உருவாக்குகிறது” என நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |