தென் ஆப்பிரிக்காவை சமாளிக்க இந்தியா இதை செய்யனும்! சச்சின் கொடுத்த முக்கிய அட்வைஸ்
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாடவுள்ள இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட்டில் தொடர்ந்து சாதித்து வரும், இந்திய அணி, இந்த முறை தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதை செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள வீரரான சச்சின் டெண்டுல்கர், வெளிநாட்டு மண்ணில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து கூறுகையில், தன்னைப் பொறுத்தவரை, கிரிகெட்டில் ஒரு பேட்ஸ்மேனுக்கு பிரண்ட் புட்(முன்னோக்கி கால் நகர்த்தல்) என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
இன்னிங்ஸின் ஆரம்பத்தில், குறிப்பாக முதல் 25 ஓவர்கள் இப்படி ஆடுவதன் மூலம் நாம் விக்கெட்டுகள் விழுவதை தவிர்க்க முடியும். கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் சதம் அடிக்க காரணமாக அவர்களது இந்த கால் நகர்வுகள் தான் காரணம்.
இப்படி ஆடுவதன் மூலம் நம் உடம்பில் இருந்து கைகள் எளிதாக வெளியில் செல்லாது. வெளிநாட்டு மைதானங்களில் வேகம் மற்றும் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பந்து பிட்ச் ஆகி வெளியே செல்லும் போது நாம் கையை பிரி செய்து விளையாடுகிறோம்.
அப்படி விளையாடுவதன் மூலம் எளிதாக விக்கெட்டுகள் கிடைக்கின்றன.
ஆனால் பிரெண்ட் புட் டிபன்ஸ் ஆடும் போது,நாம் வெளியில் செல்லும் பந்தை அடிக்க நினைக்க மாட்டோம்.
எனவே நிச்சயம் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் விளையாடினால் நல்ல முடிவு தெரியும் என்று கூறியுள்ளார்.