நடுவரை கிண்டல் செய்த இந்திய வீரர்கள் - வைரலாகும் வீடியோவால் நடவடிக்கை பாயுமா?
இலங்கை அணிக்கெதிரான போட்டியில் ஆட்ட நடுவரை இந்திய வீரர்கள் கிண்டல் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஆட்டத்தில் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, நேற்று இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் 2வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.
These guys ?#indvsl pic.twitter.com/3p4T9O4JUV
— vel (@velappan) February 26, 2022
இந்த ஆட்டத்தின் போது 9.5வது ஓவரில் இலங்கை வீரர் அசாரங்கா சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அசரங்கா விக்கெட்டை மறுஆய்வு செய்த போது அது அவுட் என உறுதியானது.
அப்போது களத்திற்குள் வீரர்களுக்கு பானம் கொடுக்க வந்த நேற்றைய போட்டியில் விளையாடாத இந்திய வீரர்கள் நடுவர் பின்னால் நின்று அவுட் வழங்கி கிண்டல் செய்தனர். அப்போது குல்தீப் நடுவர் மீது லேசாக இடித்துவிட்டார். இந்த காட்சி தற்போது வைரலான நிலையில் வீரர்கள் இருவர் மீதும் நகைச்சுவையாக இருந்தாலும் ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.