தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி கர்ப்பிணிப்பெண்: மறக்கமுடியாத ஒரு வலி
பிரித்தானியாவில் தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி கர்ப்பிணிப்பெண் ஒருவர், வாழ்நாளில் மறக்கமுடியாத அந்த வலியைக் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
சிறையிலடைக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண்
சீமா மிஸ்ரா, தனது 10 வயது மகன் ஆதித்யாவை முத்தமிட்டு, மாலையில் வந்து உனக்குப் பிடித்த உணவை தயாரித்துத் தருகிறேன் என்று கூறிவிட்டு பணிக்குச் சென்றார்.
ஆனால், அவர் மாலையில் வீடு திரும்பவில்லை, மாறாக, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அப்போது எட்டு வார கர்ப்பிணி!
சீமா, தபால் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிவந்த நிலையில், 74,000 பவுண்டுகளை திருடிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Eyevine
குற்றம் சாட்டப்பட்டது சீமா மட்டுமல்ல. அவருடன் 700 தபால் அலுவலக பணியாளர்கள், sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்தவர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்கள். அவர்களில் சீமாவும் ஒருவர். ஆனால், தான் கர்ப்பிணியாக இருந்ததால்தான் தன்னால் தற்கொலை செய்யமுடியவில்லை என்று கூறியுள்ளார் சீமா.
Alamy
இதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், கர்ப்பிணியான சீமா சிறையிலடைக்கப்பட்டதை, தபால் நிலைய சட்டத்தரணி ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினாராம்.
கர்ப்பிணியான சீமா சிறையிலடைக்கப்பட, அவரது கணவர் Davinder (51) தாக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியினர் என்பதாலும், அவர்கள் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இதெல்லாம் நடந்தது 2010ஆம் ஆண்டு...
நடந்தது என்ன?
உண்மை என்னவென்றால், தபால் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் Horizon என்னும் சாஃப்ட்வேரின் பிரச்சினையால்தான் இந்த தபால் அலுவலக ஊழியர்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த உண்மை 2019ஆம் ஆண்டுதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. என்றாலும், 2021ஆம் ஆண்டு சீமா குற்றமற்றவர் என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Supplied
ஆனாலும், தான் ஒரு கர்ப்பிணியாக இருந்த நேரத்தில், திடீரென, செய்யாத குற்றத்துக்காக சிறை சென்றதை சீமாவால் இன்னமும் ஜீரணிக்கமுடியவில்லை.
இப்போது சீமாவுக்கு 47 வயது ஆகிறது. நான்கு மாதங்கள் சிறியிலிருந்த பின், அவர் சிறையிலிருந்து வந்து, கால்களில் மின்னணுப் பட்டையுடன், பெற்றெடுத்த அவருடைய மகன் Jairajக்கு இப்போது வயது 12.
Supplied
கர்ப்பிணியாக இருந்தபோது சிறையில் அடைக்கப்பட்ட விடயம் பயங்கரமாக இருந்தது என்று கூறும் சீமா, போதைக்கு அடிமையானவர்களும், குழந்தைகளை சீரழித்தவர்களும் தங்கியிருந்த அதே அறையில் தான் நடுக்கத்துடன் செலவிட்ட நாட்களை நினைவுகூறுகிறார்.
கர்ப்பிணியாக இல்லாதிருந்தால், நிச்சயம் நான் தற்கொலை செய்துகொண்டிருப்பேன் என்கிறார் அவர் அந்த வலி மிகுந்த நாட்களை நினைவுகூர்ந்தவராய்...
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |