வாக்களித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி! அடுத்து அவர் கூறியது என்ன?
மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.
மூன்றாம் கட்ட தேர்தல்
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், கடந்த மாதம் 19 -ம் திகதி மற்றும் 26-ம் திகதியில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இந்நிலையில், இன்று உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா , மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உட்பட்ட 93 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
மோடி வாக்களித்தார்
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அப்போது, பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, "மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாக வேண்டும். மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.
மேலும், வெயில் அதிகமாக இருப்பதால் அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |