வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு தோசை உணவகம் துவக்கிய இந்தியரின் இன்றைய நிலை
ஜேர்மனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த இந்தியர் ஒருவர், தனது வேலையை உதறிவிட்டு தோசை உணவகம் ஒன்றைத் துவக்கினார்!
தோசை உணவகம் துவக்கிய இந்தியரின் இன்றைய நிலை
பொறியாளரான மோகன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் படித்துவந்த நிலையில், ஜேர்மனியில் நல்ல சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்துள்ளது.
ஆனால், ஒரு கட்டத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு, பாரீஸில் தோசை உணவகம் ஒன்றைத் துவக்க மோகனும் அவரது நண்பர்களும் முடிவு செய்துள்ளனர்.
சொந்தமாக தொழில் துவங்க முடிவெடுத்தாலும், அது கடினமான ஒன்றாக இருந்துள்ளது. தூக்கமில்லா இரவுகள் பலவற்றை செலவிட்டபின் தோசாமா என்னும் உணவகத்தைத் துவக்கியுள்ளனர் மோகனும் நண்பர்களும்.

2023ஆம் ஆண்டு பாரீஸில் துவக்கப்பட்ட தோசாமா உணவகத்துக்கு இன்று லண்டனில் ஒரு கிளை உள்ளது. அத்துடன், தன் சொந்த நாடான இந்தியாவின் புனேயிலும் தோசாமாவின் கிளை ஒன்றைத் துவக்கியுள்ள மோகன், இன்று அந்நிறுவனத்தின் நிர்வாக மேலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
பொறியாளரான தான் தோசை உணவகம் துவக்க எடுத்த முடிவு குறித்து மோகன் சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொள்ள, அவருக்கு பலரும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்துவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |