இந்திய ரயில்வே துறையில் புதிய புரட்சி: ஜிந்த் - சோனிபட் இடையே முதல் ஹைட்ரஜன் ரயில்
இந்தியாவில் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் பயணத்தை தொடங்க உள்ளது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்
இந்தியாவின் ரயில்வே போக்குவரத்து துறையின் மைல்கல் முயற்சியாக ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் இயக்கப்பட உள்ளது.
டீசல் பயன்பாட்டை குறைத்து சுற்றுச்சூழல் நலனை பாதுகாக்கும் முயற்சியில் “நிகர பூஜ்ஜியம்” என்ற இலக்கை அடைவதற்கான முதல் முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.

இதற்காக ஹரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
ஆலையின் சிறப்பம்சங்கள்
இந்த ஆலையின் தடையற்ற செயல்பாட்டிற்காக ஹரியானா அரசு சுமார் 11KV மின்சார இணைப்பை வழங்கியுள்ளது.
ஹைட்ரஜன் ஆலையின் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையுள்ள நிலையில், இதில் 3000 கிலோ ஹைட்ரஜன் சேமித்து வைக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
வேகமான பயணம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது மட்டுமல்லாமல், பயண நேரத்தையும் வெகுவாக மிச்சப்படுத்தும்.
89 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஜிந்த் - சோனிபட் இடையிலான பயண நேரத்தை ஹைட்ரஜன் ரயில் பாதியாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாமானிய மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் ரூ.89 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், பயணி ஒருவருக்கு ரூ.5 முதல் ரூ.25 வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |