பிரித்தானியாவில் சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் இந்திய உணவகம்: காரணம் இதுதான்
லண்டனில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. அதற்குக் காரணம், அங்கு கிடைக்கும் ஒரு உணவு!
சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் இந்திய உணவகம்

இங்கிலாந்திலுள்ள Islington என்னுமிடத்தில் அமைந்துள்ளது, The Tamil Crown என்னும் இந்திய உணவகம்.
பிரித்தானியர்களின் விருப்ப உணவான Classic English roastக்கு, தென்னிந்திய ட்விஸ்ட் கொடுத்து அந்த உணவகம் தயாரித்துள்ள ஒரு உணவு பலரையும் கவர்ந்துள்ளது. அந்த உணவால், The Tamil Crown உணவகம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.

உப்பு, மிளகு போன்ற சில மசாலாக்களை மட்டுமே பயன்படுத்தி சுவையூட்டப்படும் Classic English roastஐ, The Tamil Crown உணவகத்தில், masala roast chicken, masala lamb shank மற்றும் vegetarian roast என மூன்று வித்தியாசமான வகையில் சமைக்கிறார்கள்.

அத்துடன், உருளைக்கிழங்கு, பட்டாணி மசாலா, அவியல், ரொட்டி முதலான சில உணவுவகைகளும் உடன் வழங்கப்படுகின்றன.
இந்த உணவகத்தில் சாப்பிட்டவர்கள், தாங்கள் சாப்பிட்ட உணவு நீண்ட நாட்களுக்கு தங்கள் மனதில் நிற்கும் என்னும் வகையில் கருத்துக்களை தெரிவிக்க, The Tamil Crown உணவகம், டிக்டாக் முதலான சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.



| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |