சுவிட்சர்லாந்தில் இந்திய உணவகங்களைக் குறிவைத்து ரெய்டு
ஆட்கடத்தல் நடந்திருப்பதாக சந்தேகத்தின்பேரில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இந்திய உணவகங்களைக் குறிவைத்து ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்திய உணவகங்களைக் குறிவைத்து ரெய்டு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள இந்திய உணவகங்கள் பலவற்றில் பொலிசார் ரெய்டுகள் நடத்தியுள்ளார்கள்.
ரெய்டுகளைத் தொடர்ந்து, ஆட்கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
பொலிசார் நடத்திய விசாரணையில், உணவகங்களில் வேலை செய்வதற்காக சட்டவிரோதமாக சிலர் சுவிட்சர்லாந்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அப்படி அழைத்துவரப்பட்டவர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளதுடன், வரி செலுத்துவது மற்றும் அரசு உதவி பெறுவதற்காக அவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்படாமலும் விடப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இந்தியாவுக்கு தப்பிவிடக்கூடும் என கருதப்படுவதால், அவர்கள் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |