வேலை தேடி வெளிநாடு பயணம்... தற்போது இந்திய கோடீஸ்வர விஞ்ஞானிகளில் ஒருவர்: அவரது சொத்து மதிப்பு
இந்தியாவின் ஆந்திரா மாகாணத்தை சேர்ந்தவர் பிழைப்புக்காக அமெரிக்கா சென்று, மருந்தகம் ஒன்றில் பணியாற்றி, நாடு திரும்பியவர் பின்னர் 17 பில்லியன் டொலர் மதிப்பிலான நிறுவனம் ஒன்றை நிறுவினார்.
பிழைப்புக்காக அமெரிக்கா பயணம்
ஆந்திராவின் குட்டி கிராமப்பகுதியை சேர்ந்தவர் முரளி திவி. அரசாங்க ஊழியரான தந்தை. மூத்த சகோதரரை போன்று மருந்தகம் சார்ந்த படிப்பை முன்னெடுக்கவே முரளி திவி ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால் குடும்ப சூழல் காரணமாக 1976ல் தமது 25வது வயதில் பிழைப்புக்காக அமெரிக்கா பயணப்பட்டுள்ளார். ஆனால் அங்கேயும் மருந்தகம் ஒன்றிலேயே வேலை கிடைத்துள்ளது.
மட்டுமின்றி, பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ள முரளி திவி, ஆண்டுக்கு 65,000 டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளார். இந்த நிலையில், இந்தியா திரும்ப முடிவு செய்த முரளி திவி, 40,000 டொலர் தொகையுடன் எந்த திட்டமும் இன்றி ஆந்திரா திரும்பியுள்ளார்.
சந்தை மதிப்பு ரூ.130,000 கோடி
1984ல் தற்போதைய Reddy’s Labs நிறுவனரான மருத்துவர் Kallam Anji Reddy உடன் பணியாற்ற துவங்கினார். சுமார் 6 ஆண்டுகள் Reddy’s Labs நிறுவனத்தில் பணியாற்றிய முரளி திவி, 1990ல் Divi’s Laboratories என்ற நிறுவனத்தை துவங்கினார்.
1995ல் Choutuppal பகுதியில் முதல் தொழிற்சாலையை நிறுவியவர், 2002ல் விசாகப்பட்டினம் அருகே தமது இரண்டாவது தொழிற்சாலையை உருவாக்கினார்.
2022ல் Divi’s Laboratories நிறுவனத்தின் மொத்த வருவாய் என்பது 88 பில்லியன் ரூபாய் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி Divi’s Laboratories நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.130,000 கோடி என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |