இணயத்தில் ரகசிய வியாபாரம்... சிக்கிய இந்திய வம்சாவளி பிரித்தானியர்: ரூ 1,250 கோடி பறிமுதல்
இந்திய வம்சாவளி பிரித்தானியர் ஒருவர் Dark Web பயன்பாட்டினூடாக சட்டவிரோத போதை மருந்து விற்பனை முன்னெடுத்து வந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான போதை மருந்து
இந்திய வம்சாவளி Banmeet Singh என்பவர் Dark Web பயன்பாட்டினூடாக நிறுவனம் ஒன்றை செயல்படுத்தி வந்துள்ளார். இந்த நிறுவனமூடாக உயிருக்கு ஆபத்தான போதை மருந்துகளை அமெரிக்கா முழுவதும் ரகசியமாக விற்பனை செய்துள்ளார்.
@ap
மேலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து இவர் கிரிப்டோகரன்சியாகவும் பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2012 முதல் 2017 வரையில் Banmeet Singh அமெரிக்கா முழுவதும் மொத்தமாக 8 விநியோக அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் ரகசிய விசாரணையினூடாக Banmeet Singh அடையாளம் காணப்பட்டு, அவர் மீது முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும்
அத்துடன், அவர் இதுவரை திரட்டிய 150 மில்லியன் அமெரிக்க டொலர், இந்திய மதிப்பில் ரூ 1,247 கோடி தொகையை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவரிடம் இருந்து பெறப்படும் மருந்துகள், உரிய விநியோக அமைப்புகளால் மறுபடியும் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் கனடா, பிரித்தானியா, அயர்லாந்து, ஜமைக்கா, ஸ்கொட்லாந்து மற்றும் அமெரிக்க விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பத்திரமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுவரை பல நூறு கிலோ அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட போதை மருந்துகளை அமெரிக்கா முழுவதும் Banmeet Singh விநியோகம் செய்துள்ளதாக நம்பப்படுகிறது. 2019 ஏப்ரல் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்ட Banmeet Singh 2023ல் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படவும் தீர்ப்பானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |