அன்று சாதாரண பாடசாலை ஆசிரியர்., இன்று ரூ.330 கோடி நிறுவனத்தின் உரிமையாளர்!
இவர் IIT, IIM பட்டதாரி அல்ல, சாதாரண பாடசாலை ஆசிரியையாக இருந்த பெண், இன்று ரூ.330 கோடி நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.
சில வெற்றிக் கதைகள் மிகவும் ஊக்கமளிக்கும். மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வைக்கும்.
சிங்கப்பூரில் மழலையர் பாடசாலை வைத்திருக்கும் இந்தியத் தொழிலதிபரான பிரேர்னா ஜுன்ஜுன்வாலாவின் (Prerna Jhunjhunwala) கதை அத்தகைய ஒரு ஊக்கமளிக்கும் கதை.
அவர் சிங்கப்பூரில் லிட்டில் பேடிங்டன் (Little Paddington) என்ற மழலையர் பாடசாலையை நிறுவினார்.
பின்னர் அவர் கிரியேட்டிவ் கலிலியோ (Creative Galileo) என்ற Edutech startup-பை தொடங்கினார், இது 3 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரேர்னா ஜுன்ஜுன்வாலா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். அவரது நிறுவனம் Toondemy மற்றும் Little Singham என இரண்டு Application-களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவை 1 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளன. இந்தியாவில் Google Play Store-ல் சிறந்த 20 App-களில் இடம்பிடித்த ஒரே kids' learning app இவருடையதாகும்.
இந்த செயலி குழந்தைகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணம், கதை வீடியோக்கள் மற்றும் கேமிஃபிகேஷன் ஆகியவற்றை வழங்குகிறது.
பொதுவாக, ஸ்டார்ட்அப்களைத் தொடங்குபவர்கள் IIT,IIM அல்லது வேறு ஏதேனும் Business Schoolகளில் படித்தவர்களாக இருப்பார்கள். அனால் இவர் அப்படியல்ல.
அவர் முறையான வணிகப் படிப்புகள் எதுவும் செய்யவில்லை. எந்த தொழில் பயிற்சியும் இல்லாமல் இந்த நிறுவனத்தை நிறுவினார்.
பிரேர்னா ஜுன்ஜுன்வாலாவின் ஸ்டார்ட்அப் கடந்த ஆண்டு முதலீடுகளில் சுமார் 330 கோடி ரூபாய் திரட்டியது.
அவர்கள் மார்க்கெட்டிங்கில் மிகக் குறைவாகவே செலவிட்டுள்ளனர். தற்போது 30 பேர் இந்த ஸ்டார்ட்அப்பில் பணிபுரிகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Prerna Jhunjhunwala, Toondemy, Little Singham, Little Paddington, Creative Galileo, PreSchool teacher to Businesswomen