இந்திய இராணுவ ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு கசிவு! இருவர் கைது
பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
போர் பதற்றம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியாவுடனான பதற்றங்களைத் தணிக்க ரஷ்யாவிடம் பாகிஸ்தான் உதவி கோருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பஞ்சாபில் இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ ரகசியங்கள் கசிவு
கைது செய்யப்பட்ட பாலக் ஷெர் மாஸி, சூரஜ் மாஸி ஆகிய இருவரும் இந்திய இராணுவத்தின் கண்டோன்மென்ட் பகுதிகள் மற்றும் அமிர்தசரஸில் உள்ள Airspace உள்ளிட்ட தகவல்கள் சேகரித்துள்ளனர்.
அவற்றை அவர்கள் பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளதாக பஞ்சாப் மாநில DGP கௌரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
எல்லைப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாப்பில் நடந்துள்ளது இந்த கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |