இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்! இந்திய அணியில் இவர்களுக்கு இடமில்லை என அதிரடி முடிவு
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த், சாஹா உள்ளிட்டோர் இடம் பெற மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.
பிசிசிஐ உயர் அதிகாரி இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 25ம் திகதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, விருத்திமான் சாஹா, அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படாது என இந்திய கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொடரில் தேர்வாளர்கள் சில புதிய வீரர்களை களமிறக்க விரும்புகிறார்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்ற மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பிசிசிஐ உயர் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார்.
அணியில் இடம் இல்லை என்பது தேர்வாளர்களால் தனித்தனியாக நான்கு பேரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஞ்சி போட்டியில் அவர்களது செயல் திறனை பொறுத்து புஜாரா மற்றும் ரஹானேவுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் இஷாந்த் மற்றும் சாஹா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதிப்படுத்தப்படக்கூடிய தகவல்கள் வெளிவருகின்றன.