ட்ரம்ப்பின் முடிவால் கடுமையான சரிவை சந்தித்த இந்தியப் பங்குச் சந்தைகள்
ஈரான் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்திக்கத் தொடங்கியுள்ளன.
அமைதி ஒப்பந்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார்.

ஈரான், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் பரிமாறப்பட்ட சூழலில் இந்த அறிவிப்பு வெளியானது.
ஆனால், அதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்தது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பாதிக்க, இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவை சந்திக்கத் தொடங்கியுள்ளன.
இந்தியப் பங்குச் சந்தைகள்
இந்த சரிவு நிலை நீடித்தால், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான காலத்தில், இந்தக் குறியீடுகள் சந்திக்கும் மிகப்பெரிய சதவீத சரிவாக இது அமையும்.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரும், நுகர்வோருமான இந்தியாவிற்கு எண்ணெய் விலை உயர்வு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இது இறக்குமதி செலவை அதிகரிப்பதுடன் பணவீக்கத்தை உயர்த்தவும், பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கவும் செய்கிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |