இந்திய பாடகர் கொலை வழக்கு: தலைமறைவான குற்றவாளி சிக்கினார்
இந்தியாவை சேர்ந்த பிரபல பாடகர் கொல்லப்பட்டதற்கு கனடாவை தளமாகக் கொண்டு செயல்படும் குண்டர்கள் கூட்டத்தைச் சேர்ந்த Goldy Brar என்பவர் பொறுப்பேற்றிருந்தார்.
தற்போது அந்த கொலை வழக்கில் ஆறாவது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்ட விடயத்தில், கனடாவை தளமாகக் கொண்டு செயல்படும் குண்டர்கள் கூட்டத்தைச் சேர்ந்த Goldy Brar என்று அழைக்கப்படும் சத்திந்தர் சிங் என்பவர் அவரது கொலைக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
சத்திந்தர் சிங்தான் கொலையாளிகளுக்கு படிப்படியாக திட்டம் வகுத்துக் கொடுத்திருந்தார்.
கொலையில் தொடர்புடையவரான தீபக் (Deepak) என்னும் Mundi தலைமறைவாகியிருந்தார்.
File photo
இந்நிலையில், தற்போது தீபக்கும் அவரது கூட்டாளிகளான கபில் பண்டித் மற்றும் ராஜிந்தர் என்பவரும் வங்காள நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Jawarharke என்ற கிராமத்தில் மூஸ் வாலா பயணம் செய்துகொண்டிருக்கும்போது திடீரென மர்ம நபர்கள் சிலர் அவரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்கள்.
தன் மீது 19 குண்டுகள் பாய்ந்த நிலையில், சுடப்பட்டு 15 நிமிடங்களுக்குள் உயிரிழந்தார் அவர்.
மூஸ் வாலாவை சுட்டவர்களில், தற்போது ஆறாவது நபரும், அவரது கூட்டாளிகள் இருவரும் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
In a major breakthrough, @PunjabPoliceInd, in a joint operation with central agencies & #DelhiPolice, have arrested Deepak @ Mundi, absconding shooter of #SidhuMooseWala , with 2 associates.
— DGP Punjab Police (@DGPPunjabPolice) September 10, 2022
Major victory in war against drugs & gangsters on directions of CM @BhagwantMann (1/2) pic.twitter.com/XsN9jKe3lv