மணிப்பூரில் மர்ம நபர்கள் வெறிச்செயல்! விடுமுறையில் வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் கடத்தி கொலை
இந்திய மாநிலம் மணிப்பூரில் விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்த இராணுவ வீரர், துப்பாக்கி முனையில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடத்திய மர்ம நபர்கள்
மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள தருங்கைச் சேர்ந்தவர் செர்தோ தங்தங் கோம். இராணுவ வீரரான இவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று காலை 10 மணியளவில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர், செர்தோவின் வீட்டிற்கு வந்து அவரை கடத்தி சென்றுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட இராணுவ வீரர்
அதன் பின்னர் மறுநாள் குனிங்தெக் கிராமத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
செர்தோவின் உடலை அவரது சகோதரர் மற்றும் உறவினர் அடையாளம் காட்டினர். கடத்தலின்போது செர்தோவின் 10 வயது மகன் நேரில் பார்த்துள்ளார்.
இந்த நிலையில் ராணுவம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்திற்கு உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் குடும்பத்தினரின் விருப்பத்தின்படி இறுதி சடங்குகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Representational/ File)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |