பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் 22 வயது இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு! முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி
பாகிஸ்தான் இராணுவம் நடத்திய கடுமையான ஷெல் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஷெல் தாக்குதல்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இராணுவ வீரரான முரளி நாயக், போர் முனையில் ஜவானாக பணியில் இருந்தார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இராணுவம் கடுமையான ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் முரளி நாயக் வீர மரணமடைந்தார்.
அவரது உடல் சனிக்கிழமையன்று சொந்த ஊரான கல்லிதண்டா கிராமத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு
இந்த நிலையில் முரளி நாயக் வீர மரணமடைந்தது அதிர்ச்சியளிப்பதாக ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "நாட்டின் பாதுகாப்பிற்காக ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், பெனுகொண்டா சட்டமன்றத் தொகுதி, கோரண்ட்லா மண்டலத்தைச் சேர்ந்த முரளி நாயக் என்ற இராணுவ வீரர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வருத்தமாக இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |