அஸ்வினுக்கு மாற்றாக களமிறக்க போகும் மாற்று வீரர் யார்? இந்திய அணி வசமுள்ள 3 சுழற்பந்து வீச்சாளர்கள்
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
500 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நடந்து முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது, இந்த போட்டியின் 2வது நாளில் இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்(Ravichandran Ashwin) 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே உள்ளார், அவரை தொடர்ந்து அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
2,500 கோடி நிறுவனத்தை திருமணங்கள் மூலம் உருவாக்கிய தொழிலதிபர்: வெற்றி ரகசியம், சொத்து மதிப்பு தெரியுமா?
அஸ்வின் விலகல்
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.
இந்தியாவின் ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிந்த சற்று நேரத்திலேயே, பிசிசிஐ இந்த செய்தியை வெளியிட்டது.
பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், அஸ்வினுக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து, இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு தனியுரிமை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சொந்தமாக 10 ஜெட் விமானங்கள்! 22 வயதில் விமானத் துறையில் சாதித்த பெண் தொழிலதிபர்: அவரின் சொத்து மதிப்பு
BCCI-யின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா வழங்கிய X தளத்தில் தெரிவித்த தகவலில், அஸ்வின் தன்னுடைய தாயுடன் இருப்பதற்காக ராஜ்கோட்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி சென்னை திரும்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால போட்டிகளில் அஸ்வினின் பங்கேற்பு
இதுவரை, மீதமுள்ள போட்டிகளில் அஸ்வின் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. மேலும் விவரங்கள் கிடைத்ததும் பிசிசிஐ தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வினுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் போன்ற பிற சுழற்பந்து வீச்சாளர்களை மாற்று வீரர்களாக இந்திய அணி கருதலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |