இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு 18 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியாவிடம் இழந்தது.
5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 4 முடிந்துள்ள நிலையில் தொடர் 2-2 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5வது டி-20 போட்டி மார்ச் 20ம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
5வது போட்டியில் வெற்றிப்பெறும் அணி டி-20 தொடரை கைப்பற்றும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மார்ச் 23ம் முதல் இரு அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், ஒருநாள் போட்டி தொடருக்கு 18 பேர் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணி: கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன், ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குர்ணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷார்துல் தாக்கூர்.
#TeamIndia squad for @Paytm ODI series against England announced. #INDvENG
— BCCI (@BCCI) March 19, 2021
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணியில் இருந்த மணீஷ் பாண்டே, மாயங்க் அகர்வால், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் அணியல் இடம்பெறவில்லை.
பிரசீத் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ் மற்றும் குர்ணல் பாண்ட்யா ஆகியோர் இந்தியா ஒருநாள் அணியில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.