இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர் விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 8வது ஓவரில் களதடுப்பின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறினார் பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், அவரது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார்.
அதேசமயம் 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதி வரை அவர் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணி கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் அவர் 2021 ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன
