இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தை
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகியுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது,
ஜூன் 4ம் திகதியான நேற்று 18வது இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 292 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு அது பொய்யான நிலையில், இந்திய பங்குச் சந்தை நேற்று 6000 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.
இந்நிலையில் அரசியல் பரபரப்புகள் சற்று தனிந்துள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று காலை முதல் சீரான முன்னேற்றத்தை கண்டு வருகிறது.
இன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் சுமார் 1700+ புள்ளிகள் உயர்ந்து தற்போது 73,842 புள்ளிகளுடன் சென்செக்ஸ் உள்ளது.
மேலும் நிஃப்டி 50-ம் சுமார் 456+ புள்ளிகள் உயர்ந்து மொத்தமாக 22,340 புள்ளிகளை தற்போது கொண்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில், திங்கட்கிழமை இந்திய பங்குச் சந்தை உச்சத்தை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |