கனடாவில் நீரில் மூழ்கி பலியான இந்திய மாணவர்: 8 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த சடலம்; சோகத்தில் குடும்பத்தினர்
கனடாவிற்கு உயர்படிப்பு பசிக்கச் சென்ற இந்திய மாணவர் கடலில் மூழ்கி பலியான நிலையில் சடலமாக நாடு திரும்பிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் குஜராத்தை சேர்ந்த ராகுல் மகிஜா (Rahul Makhija) எனும் 23 வயது மாணவர், கடந்த 2019-ஆம் ஆண்டு, BBA படிப்பதற்காக கனடாவிற்கு சென்றிருந்தார்.
அவர் MSU பல்கலைக்கழகத்தில் BBA மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார் மற்றும் ஸ்காபரோவில் (Scarborough) தங்கியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 20-ஆம் திகதி, இந்தியாவில் இருக்கும் ராகுலின் தந்தை சுனில் மகிஜாவுக்கு கனடாவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில், ராகுல் மகிஜா நீரில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
சுனில், இது குறித்து கூறுகையில், ராகுலும் அவனது நண்பர்களும் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள Bruce Peninsula தேசிய பூங்காவிற்கு சென்றுள்ளனர். அவர்களில் சிலர் ஒரு குன்றின் கீழே உள்ள தண்ணீரில் குதித்தனர்.
தண்ணீர், மிக குளிர்ச்சியாக இருந்தது. ராகுல் நீர்மட்டத்திற்கு கீழே சென்றார், ஆனால் அவர் சில நிமிடங்களுக்கு மேலே வராதபோது ஏதோ தவறு இருப்பதை அவரது நண்பர்கள் உணர்ந்தனர். அதனப்பிறகு, அவரது நண்பர்கள் அவரது உடலை வெளியே எடுத்தனர் மற்றும் உள்ளூர் காவலர்கள் ராகுலை உயிர்ப்பிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அங்கு ராகுலின் உடலைப் பரிசோதித்த மருத்துவர் ஜார்ஜ் ஹர்பூர், நீரில் மூழ்கியதால் ராகுல் இறந்ததாக உள்ளூர் இணையதளம் ஒன்றில் தெரிவித்ததாக சுனில் மகிஜா மேலும் கூறினார். ராகுலுக்கு நீச்சலடிக்க தெறியாது என்றும், நீரின் வெப்பநிலை மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.
மேலும், சுனில் கூறுகையில், ராகுல் ரொறன்ரோவுக்கு அருகிலுள்ள செனிகா கல்லூரியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பை முடித்திருந்தார், மேலும் வேறு படிப்பை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். ராகுலின் உடலை வதோதராவுக்கு கொண்டு வர மிகக் கடினமாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.
இறுதியில், சம்பவம் நடந்து 8 நாட்கள் கழித்து, வெள்ளிக்கிழமை மாலை ஆமதாபாத் வந்தடைந்த ராகுலின் உடல், நள்ளிரவில் ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் சனிக்கிழமை தகனம் செய்யப்படுகிறது.
பல கனவுகளுடன் மேற்படிப்பிற்காக கனடா சென்ற மகன் சடலமாக திரும்பி வந்த சம்பவம் ராகுலின் பெற்றோரையும் குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.