அமெரிக்காவில் வேலை கிடைக்காததால் இந்திய இளைஞர் எடுத்த துயர முடிவு
அமெரிக்காவுக்கு உயர் கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், வேலை கிடைக்காததால் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
வேலை கிடைக்காததால் இளைஞர் எடுத்த துயர முடிவு
ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்து (Iraganaboyina Chandu, 26) என்னும் இளைஞர் உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

சிகாகோவிலுள்ள DePaul பல்கலையில் முதுகலைப் பட்டம் முடித்த சந்து, கடந்த பல வாரங்களாக வேலை தேடிக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால், அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லையாம்.
அவரது தந்தை இந்தியாவில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்துவரும் நிலையில், கடன் வாங்கித்தான் சந்துவை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளார்கள்.
ஆக, படித்து முடித்தும் வேலை கிடைக்காததால், இன்னமும் பணத்துக்காக பெற்றோரை சார்ந்திருக்கவேண்டியுள்ளதே என கவலையடைந்திருந்தாராம் சந்து.
இந்நிலையில், சந்து தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி அமெரிக்காவிலிக்கும் இந்திய சமூகத்தினருக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளதுடன், இந்தியாவிலிருக்கும் சந்துவின் பெற்றோருக்கு கடும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |