ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தன்று இந்திய இளைஞருக்கு நேர்ந்த துயரம்
இந்திய இளைஞர் ஒருவர் ஜேர்மனியில் கல்வி பயின்று வந்த நிலையில், மகன் விரைவில் இந்தியா வருவார் என அவரது பெற்றோர் காத்திருக்க, அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இந்திய இளைஞருக்கு நேர்ந்த துயரம்
இந்தியாவின் தெலங்கானாவைச் சேர்ந்த ஹ்ருத்திக் ரெட்டி (25), ஜேர்மனியில் MS பட்டம் பெறுவதற்காக கல்வி பயின்று வருகிறார்.
இம்மாதம் 14ஆம் திகதி சங்கராந்தி பண்டிகைக்காக அவர் இந்தியா வர திட்டமிட்டிருந்திருக்கிறார்.
பெற்றோர் மகனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

ஆம், புதன்கிழமை நள்ளிரவு, ஹ்ருத்திக் ஜேர்மனியில் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென தீப்பற்றியுள்ளது.
வேகமாகப் பரவும் தீ மற்றும் கரும்புகையிலிருந்து தப்புவதற்காக மாடியிலிருந்து குதித்துள்ளார் ஹ்ருத்திக். ஆனால், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் ஹ்ருத்திக். மகனுடைய வரவுக்காக ஆவலுடன் காத்திருந்த ஹ்ருத்திக்கின் பெற்றோர் தங்கள் மகனுடைய மரணச் செய்தி கேட்டு மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளார்கள்.
ஹ்ருத்திக்கின் உறவினர்கள் அவரது உடலை இந்தியா கொண்டு செல்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜேர்மனியிலுள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளார்கள்.