லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் தேம்ஸ் நதிக்கரையில் சடலமாக மீட்பு
பிரித்தானியாவில் கடந்த மாதம் காணாமல் போன 23 வயது இந்திய மாணவர், லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் உயர்கல்வி பயில, செப்டம்பரில் லண்டன் சென்ற இந்திய மாணவர் மீத்குமார் படேல், நவம்பர் 17ஆம் திகதி மாயமானார்.
காணாமல் போன மீத்குமார் படேல் குறித்து பொலிஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கிழக்கு லண்டனில் உள்ள கேனரி வார்ப் பகுதியில், தேம்ஸ் நதிக்கரையில் அவரை சடலமாக கண்டெடுத்தனர்.
மீத்குமார் படேல், பகுதி நேரமாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
நவம்பர் 17ஆம் திகதி காலை நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த விசாரணையின்போது, மீத்குமார் படேல் தன் வீட்டுச் சாவியை கதவின் அருகிலேயே வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால், மீத்குமார் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தற்போதையை தகவல்களின்படி, மீத்குமார் படேல் மரணத்தில் சந்தேகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனவும், மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர் மீத்குமார் படேல் ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது உடலை தாயகம் அனுப்பிவைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக இணையதள வழியில் பொதுமக்களிடம் நிதியுதவி திரட்டி வருவாதாகவும் அவரது உறவினர் பார்த் படேல் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் ரூ.54,000 கோடி சொத்து அதிகரிப்பு., உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டாப்-20க்குள் நுழைந்த அதானி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indian student found dead in London Thames river, Mitkumar Patel, Indian Student Mitkumar Patel, UK India News