அமெரிக்காவில் சிக்னலில் ட்ரக்கை நிறுத்தாமல் சென்ற இந்திய இளைஞர் பலி
அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் சாலை விபத்தொன்றில் பலியான நிலையில், அவர் சிக்னலில் தனது ட்ரக்கை நிறுத்தாமல் சென்றதே விபத்துக்குக் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்தில் பலியான இந்திய இளைஞர்
அமெரிக்காவில் கல்வி கற்கச் சென்ற இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த முகமது வாஜித் (Mohammed Wajid, 28) என்னும் இளைஞர் தனது செமி ட்ரக்கில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
இம்மாதம், அதாவது, ஜனவரி மாதம் 28ஆம் திகதி, 12.42 மணியளவில், அவர் அமெரிக்காவின் Massachusetts மாகாணத்திலுள்ள Plymouth County என்னுமிடத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, சிக்னலில் தனது ட்ரக்கை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
அப்போது அவரது ட்ரக், தானியம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த ஒரு ட்ரக்கின் மீது வேகமாகச் சென்று மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் ட்ரக் இரண்டாகப் பிளந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அத்துடன், இந்த விபத்தால் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள வயலிலும் பரவ, தீயணைக்கும் கருவிகள் மூலம் பின்னர் அந்தத் தீ அணைக்கப்பட்டுள்ளது.
#VerySadNews #GoneTooSoon
— Mohammed shahabuddin (@mshahab31) January 29, 2025
Today is a sad day for me and our entire Congress family. We've lost a dear friend and colleague, Mohammed Wajid, in a tragic accident in Chicago, USA.
Wajid was an active leader of the Youth Congress in Khairatabad Division and a member of the NRI… pic.twitter.com/AA1uWEafmA
விபத்தில் படுகாயமடைந்த வாஜித் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் வாஜித் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் சார்ந்த கட்சியினரிடையேயும் கடும் துயரத்தை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |