அவுஸ்திரேலியாவில் 19 வயது இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்: கண்ணீரில் மூழ்கிய குடும்பம்
அவுஸ்திரேலியாவில் நடந்த கோரமான கார் விபத்தில் 19 வயது இந்திய பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்திய இளம் பெண் உயிரிழப்பு
கடந்த சனிக்கிழமை இரவு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த கோரமான கார் விபத்தில் கோமல்ப்ரீத் கவுர் என்ற 19 வயது இந்திய இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரவு 11.30 மணிக்கு ஆல்பெனி நெடுஞ்சாலையில் உள்ள பென்ட்லி பிளாசா என்ற இடத்தில் நடந்த கார் விபத்தில் கோமல்ப்ரீத் கவுர் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது நீலநிற ஹூண்டாய் i30 ரக கார் கோமல்ப்ரீத் கவுர் மீது மோதியது குறிப்பிடத்தக்கது.

விபத்தை தொடர்ந்து அவர் உடனடியாக மீகப்பட்டு ராயல் பெர்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி கோமல்ப்ரீத் கவுர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
கோமல்ப்ரீத் கவுர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர், இவர் செவிலியர் படிப்பிற்காக அவுஸ்திரேலிய சென்றுள்ளார்.
இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி அம்ரிக் சிங்கின் மகளான கோமல்ப்ரீத் கவுர், அவுஸ்திரேலியாவில் பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே கனவை துரத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
காரை செலுத்திய 19 வயது சிறுவன்
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய 19 வயது நபருக்கு உயிரிழந்த கோமல்ப்ரீத் கவுரை ஏற்கனவே தெரியும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் விபத்தை தொடர்ந்து அவர் அங்கே உறைந்து போய் நின்றதாகவும், உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்குமாறு கதறியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமான விசாரணையை நடத்தி வருகின்றனர். அத்துடன் அந்த 19 வயது இளைஞர் மீது இதுவரை எந்தவொரு வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |