கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை! கதறும் பெற்றோர்
கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் (21) என்ற மாணவர் கனடாவில் தங்கி படித்து வந்தார். ரொறன்ரோவில் உள்ள ரெயில் நிலையத்துக்கு கார்த்திக் வாசுதேவ் சென்றபோது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் கார்த்திக் வாசுதேவ் உடலில் குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறும்போது, இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் வருத்தம் அடைந்து உள்ளோம். அவரது குடும்பத்துக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் யாரையும் இன்னும் கைது செய்யவில்லை. இது குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கார்த்திக்கின் தந்தை ஜிதேஷ் கூறுகையில், என் மகனை எதற்காக யாரோ சுட்டு கொன்றனர் என தெரியவில்லை.
நாங்கள் எங்கள் மகனை இழந்துவிட்டோம்.
அவன் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவன் என கூறியுள்ளார்.