இந்திய மாணவர்கள் திடீரென வகுப்பறையில் செய்த செயல்: ஒரு வைரல் வீடியோ
அமெரிக்க பல்கலை ஒன்றில் பயிலும் இந்திய மாணவர்கள் சிலர் திடீரென வகுப்பறையில் போட்ட நடனம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய மாணவர்கள் திடீரென வகுப்பறையில் செய்த செயல்
அமெரிக்காவின் Southern California (USC) பல்கலையில் பயிலும் இந்திய மாணவ மாணவிகள் சிலர் திடீரென தங்கள் சக மாணவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள்.
அந்த வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர் எழுந்து கேஷுவலாக வகுப்பின் முன்பகுதிக்கு செல்ல, திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேலும் சில மாணவ மாணவியர்கள் அவருடன் இணைந்து, ஷாரூக்கான் நடித்த தில் சே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சைய சைய சையா என்னும் பாடலுக்கு நடனமாடத் துவங்கினார்கள்.
மாணவ மாணவியர் நடனமாடும் அந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாக, இணையத்தில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோ தங்கள் கல்லூரிப் பருவத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக. பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |