ரஷ்ய பல்கலைகழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு: இந்திய மாணவர்களின் நிலை என்ன? தூதரகம் தகவல்
ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு நடந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பெர்ம் மாநிலத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதல் குறித்து இந்திய தூதரகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,
"பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் நலம்பெற வாழ்த்துகிறோம்.
இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இந்திய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளது. பெர்ம் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று பதிவிட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 பேர் காயமடைந்தனர், ரஷ்ய சுகாதார அமைச்சகம் வழங்கிய சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி, ரஷ்யாவின் அரசு சார்ந்த செய்தி சேவை ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
18 year old #Timur lives up to his name as he carries out a mass shooting in Russia’s Perm University. Many dead as students run for cover. pic.twitter.com/VwcdB2j9g9
— Tarek Fatah (@TarekFatah) September 20, 2021
ரஷ்ய புலனாய்வுக் குழுவின் கூற்றுப்படி, ஒரு பல்கலைக்கழக வளாகக் கட்டிடம் ஒன்றின் எல்லைக்குள் நுழைந்த ஒரு மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டார். மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு தொடங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
12,000 மாணவர்கள் சேர்ந்த பல்கலைக்கழகம், தாக்குதலின் போது சுமார் 3,000 பேர் வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதலின் போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களை அறைகளில் அடைத்து வைத்தனர், அதே நேரத்தில் ரஷ்ய செய்தி தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் சில மாணவர்கள் இரண்டாவது மாடி ஜன்னல்களிலிருந்து குதித்ததாக ஒரு ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
Embassy is in touch with local authorities and representatives of Indian students. All Indian students at Perm State Medical University are safe. (2/2)@PMOIndia @narendramodi @DrSJaishankar @MEAIndia
— India in Russia (@IndEmbMoscow) September 20, 2021
