90,000 வெளிநாட்டவர்களுக்கு வாழிட உரிமம் வழங்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வழங்கத் துவங்கியது கனடா
90,000 வெளிநாட்டவர்கள் பயன்பெறும் வகையில், நிரந்தர வாழிட உரிமம் வழங்கும் திட்டம் ஒன்றிற்கான விண்ணப்பங்கள் வழங்கும் திட்டம் ஒன்றை கனடா துவங்கியுள்ளது.
அத்திட்டத்தின் கீழ், 40,000 வெளிநாட்டு மாணவர்கள், அத்தியாவசிய பணியாற்றும் 30,000 தற்காலிக பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறையில் தற்காலிக பணியாற்றும் 20,000 பேருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தால், இந்திய மாணவர்கள் உட்பட ஏராளம் வெளிநாட்டு மாணவர்கள் பலனடைய இருக்கிறார்கள்.
2020இல் 341,000 புலம்பெயர்ந்தோருக்கு வாழிட உரிமம் வழங்க கனடா திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனாவால் சர்வதேச பயணம் தடைபட்டதால், அந்த திட்டம் செயல்படாமல் நின்றுவிட்டது.
ஆகவே, 2020இல் ஏற்பட்ட குறைப்பாட்டை சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே கனடாவில் இருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.